இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவர்கள் பயணித்த 5 படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.