செய்திகள்உள்நாட்டுவிதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால்மா

விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால்மா

சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 பால் மா கொள்கலன்கள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (29) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.

குறித்த பால் மா தொகை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை மீறி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பால் மா கொள்கலன்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையொன்றை அவர் இன்று (29) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

பால் மாவை இறக்குமதி செய்கிறோம் என்ற போர்வையில் இறக்குமதியாளர்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக உரிய அறிக்கையில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த பிரச்சினை காரணமாக இந்த நாட்டில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles