மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்தத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மாவட்ட சபையை அமைக்க முன்மொழிந்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி அவர்களே, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை நான் செவிமடுத்தேன்இ அதனைச் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.
‘இது நல்லதுஇ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள நாங்கள் இதற்கு முழுமையாக ஆதரவளிப்போம்’ என்று சிறிசேன எம்.பி. பதிலளித்தார்.