நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களின் பற்றாக்குறைக்கு நிதி நெருக்கடி காரணமல்ல என முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
மருந்து பொருட்களை முன்பதிவு செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தினால் இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட சிக்கல் நிலையே இதற்கு காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.