முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவை பெற்றதாக அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான எழுத்துமூல உரைகளை ஜனவரி 16 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.