Saturday, July 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் இரும்புச் சத்து மருந்துகளுக்கு தட்டுப்பாடு

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் இரும்புச் சத்து மருந்துகளுக்கு தட்டுப்பாடு

கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் இரும்புச் சத்து மருந்துகளுக்கான தட்டுப்பாடு இதுவரையில் தீர்க்கப்படாமல் உள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சுமார் 2 மாதங்களாக இரும்புச் சத்துக்காக வழங்கப்படும் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. குறித்த மாத்திரைகள் முன்னர் 1 முதல் 2 ரூபா வரையிலான விலையில் கிடைக்கப்பெற்றன.

தற்போது அதற்கு பதிலாக ஒரு வகையான மருந்து மாத்திரமே கிடைக்கப்பெறுகிறது. அது 30 முதல் 35 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய பொருளாதாரச் சிக்கல்களால் அதிக விலைக்கு குறித்த மாத்திரைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது.

அதனைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles