இன்று மற்றும் நாளை (28 & 29) நாளாந்தம் 40,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு அனுப்பப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வியாழன் முதல் நாளொன்றுக்கு 100,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் எனவும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 4000 மெற்றிக் டன் எரிவாயு கொண்ட கப்பல் எதிர்வரும் புதன்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது.