கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு 80% பாடசாலை வரவு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொவிட் உள்ளிட்ட காரணங்களால் இந்த கட்டாய நடைமுறை தளர்த்தப்பட்டிருந்தது.
தற்போது நிலைமை சீராகி வரும் நிலையில், 2023ஆம் ஆண்டும் அதன் பின்னரும் உயர்தர பரீட்சைக்கு தோற்ற 80% பாடசாலை வரவு கட்டாயமாகும்.