Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுரொனால்டோவின் சாதனை - வென்றது போர்ச்சுக்கல்

ரொனால்டோவின் சாதனை – வென்றது போர்ச்சுக்கல்

FIFA உலகக்கிண்ண தொடரில் போர்ச்சுக்கல் – கானா அணிகளுக்கு இடையிலான போட்டியில் போர்ச்சுக்கல் 3:2 என்ற கணக்கில் வென்றது.

இந்தப் போட்டியில் முதல் 65 நிமிடங்களில் கோல்கள் இல்லை.

65ஆம் நிமிடத்தில் ரொனால்டோ பெனால்ட்டி முறையில் கோல் பெற்றதன் பின்னர் 73ஆம் நிமிடத்தில் கானாவின் அயேவ் கோல் ஒன்றை போட்டார்.

தொடர்ந்து 78, 80ஆம் நிமிடங்களில் போர்ச்சுகளின் ஃபீலிக்ஸ் மற்றும் லியோ 2 கோல்களை போட்டனர்.

89ஆவது நிமிடத்தில் ஒஸ்மான் புக்காரி கானா சார்பாக இன்னொரு கோலை போட்டார்.

மேலதிக / காயதாமத நேரமாக வழங்கப்பட்ட நிமிடங்களில் கோல்கள் எதுவும் பெறப்படவில்லை.

இதன்படி போர்ச்சுக்கல் 3:2 என்ற கணக்கில் இந்தப் போட்டியில் வென்றது.

5 உலகக்கிண்ண தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை க்றிஸ்டியானோ ரொனால்டோ படைத்தார்.

அத்துடன் உலகக்கிண்ண போட்டிகளில் 8 கோல்களை மொத்தமாக போட்டு, லியோனால் மெசியை ரொனால்டோ கடந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles