Sunday, November 10, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கான விசா கட்டணங்களை அதிகரிக்க தீர்மானம்

இலங்கைக்கான விசா கட்டணங்களை அதிகரிக்க தீர்மானம்

2023 வரவுசெலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், விசாக்களுக்கான கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களை டிசம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான விசேட அறிவிப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 2,000 அமெரிக்க டொலர்களாக திருத்தப்பட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை பெறும் 22 வயதுக்குட்பட்ட மனைவி அல்லது குழந்தைக்கு அதற்கான வழங்குவதற்கான கட்டணம் 500 டொலர்களாக திருத்தப்பட்டுள்ளது.

குடியுரிமையின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles