Friday, November 15, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சாரத்தை துண்டிக்க சென்ற ஊழியர்களுக்கு இடையூறு செய்த முன்னாள் அமைச்சர்

மின்சாரத்தை துண்டிக்க சென்ற ஊழியர்களுக்கு இடையூறு செய்த முன்னாள் அமைச்சர்

கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவரின் கடமைக்கு முன்னாள் அமைச்சர் நவின் இடையூறு செய்ததாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

குறித்த வீட்டில் பாரியளவு மின்கட்டண நிலுவை இருப்பது தொடர்பில் பல தடவைகள் அறிவித்த போதும், கட்டணத்தை செலுத்தாததால் மின்சாரத்தை துண்டிக்க ஊழியர்கள் சென்றதாகவும், இதன்போது முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, அவர்களின் கழுத்தைப் பிடித்து வெளியே துறத்தி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (23) பிற்பகல் மின் ஊழியர்கள் அங்கு சென்ற போது, ​​வீடு பூட்டி கிடந்துள்ளதாக ஜனக்க ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles