வார இறுதி நாட்களில் கல்கமுவ நகருக்கு மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களில் பலர் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான மாணவர்கள் நகரில் உள்ள வெறிச்சோடிய இடங்களுக்குச் சென்று இந்த செயல்களில் ஈடுபட தூண்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் பெரும்பாலானோர் 14-17 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது.
இது தொடர்பில் பொலிஸாரோ அல்லது உரிய அதிகாரிகளோ இதுவரை கஉரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கல்கமுவ நகரத்திற்கு ஆதரவு வகுப்புகளுக்கு வந்த மாணவர்கள் குழுவொன்று கல்கமுவ பொது விளையாட்டரங்கில் புகைபிடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இவர்கள் 10ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.