Friday, November 15, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு8 இலட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

8 இலட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 8 இலட்சத்திற்கும் அதிக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது.

206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம், 15 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.

கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டத்தின் கீழ், இதுவரை 870,412 சாதாரண கண்ணிவெடிகளும் 2,169 இராணுவ டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் நிலக்கண்ணிவெடிகள் 4.3 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதிகளில் அகற்றப்பட்டு, மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காக விடுவிக்கப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மேலும் 13.5 சதுர கிலோமீற்றர் நிலப்பகுதியில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படவுள்ளதாக குறித்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

#BBC

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles