Friday, May 23, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீனவர்களின் மண்ணெண்ணெய் தேவைக்கு அரசிடமிருந்து தீர்வு

மீனவர்களின் மண்ணெண்ணெய் தேவைக்கு அரசிடமிருந்து தீர்வு

மீனவர்களின் மண்ணெண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதற்காக நாளாந்தம் 50 பெளசர்களை அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான விசேட கடிதம் ஒன்று நேற்று மாவட்ட செயலாளர்கள், மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண கூட்டுறவு அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) கீர்த்தி தென்னகோனினால் கடற்றொழிலுக்கான மண்ணெண்ணெய் முறையாகவும் தொடர்ச்சியாகவும் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மீனவ மக்களின் தேவைக்காக மண்ணெண்ணெய் ஏற்றிச் செல்லும் 357 பெளசர்களை விடுவிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அனுமதி வழங்கியிருந்தது.

இருப்பினும், எரிபொருள் நிலையங்கள் 206 பெளசர்களை (58%) மாத்திரமே பெற்றுள்ளன.இதற்காக 3.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் மேலதிகமாக செலவிட்டுள்ளது.

இந்த மேலதிக செலவு இருந்த போதிலும், மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் உரிய முறையில் வழங்கப்படாததால், மீனவ சமூகம் மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles