Thursday, May 22, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇசுரு பண்டாரவுக்கு சிறையில் 'சிறப்பு கவனிப்பு'?

இசுரு பண்டாரவுக்கு சிறையில் ‘சிறப்பு கவனிப்பு’?

தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் பல கோடி ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலியின் நண்பரான இசுரு பண்டாரவுக்கு, மெகசின் சிறைச்சாலையின் பிரதான அலுவலகத்தில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு வசதிக்கு மூத்த சிறை அதிகாரிகள் அங்கீகாரம் அளித்துள்ளதாக தெரியவருகின்றது.

இசுரு பண்டார காலையில் பார்வையாளர்களைச் சந்திக்க அழைத்துச் செல்லப்படுகிறார்.

மேலும் அவர் நாள் முழுவதும் ஜெயிலர் அலுவலகத்தில் செலவிடுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரிகளின் தொலைபேசிகளையும் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

#The Island

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles