Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலிட்ரோ எரிவாயுவுக்கு தட்டுப்பாடு

லிட்ரோ எரிவாயுவுக்கு தட்டுப்பாடு

நாட்டின் சில பகுதிகளில் லிட்ரோ எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக வாடிக்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிக்கையில்,

சில எரிவாயு விநியோகத்தர்கள் உடனடி பணத்திற்கு மாத்திரமே எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதாகவும் இதன் காரணமாக சிறிய விற்பனையாளர்களுக்கு எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு தீர்வு வழங்கும் வகையில், கடன் வசதியின் கீழ் சிறிய விற்பனையாளர்களுக்கு எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விநியோக முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles