Wednesday, March 19, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்களை ஓமானுக்கு அழைத்து சென்று விற்ற பெண்ணுக்கு பிணை

பெண்களை ஓமானுக்கு அழைத்து சென்று விற்ற பெண்ணுக்கு பிணை

இலங்கை பெண்களை ஓமானுக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

49 வயதான குறித்த பெண் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

ஓமானில் வசித்து வந்த அவர் அண்மையில் நாடு திரும்பியதாகவும், அவரே இலங்கைப் பெண்களை சட்டவிரோதமாக ஓமானுக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக பாலியல் தொழிலாளர்களிடம் ஏலத்தில் விற்கும் வலையமைப்பை இயக்கியதாகவும் கூறப்படுகிறது.

அவர் நேற்று கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 300,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles