இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை தோல்வியடைந்ததையடுத்து அமைச்சர் பந்துல குணவர்தன சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் பந்துல குணவர்தன சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக அண்மையில் இந்தியா சென்றிருந்தார்.
இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சை தவறாக நடந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பந்துல குணவர்தன சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பந்துல குணவர்தன வகித்து வந்த அனைத்து அமைச்சுப் பதவிகளின் பொறுப்பும் சாந்த பண்டாரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.