Wednesday, May 14, 2025
28.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசந்திரிக்காவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

சந்திரிக்காவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேவின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது எடுக்கப்பட்ட சில முக்கியமான தீர்மானங்களை, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினதும், கட்சியில் இருந்து விலகிய ஏனையோரினதும் உறுப்புரிமைகளை அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை நிறைவடையும் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீரவை நீக்கி, அவருக்கு பதிலாக திலங்க சுமத்திபாலவுக்கு அந்த பதவி வழங்கப்படவுள்ளது.

அத்துடன், 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்து அதனை தோற்கடிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles