Thursday, September 25, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகலென்பிந்துனுவெவ OIC மனைவியின் மின்சார திருட்டு

கலென்பிந்துனுவெவ OIC மனைவியின் மின்சார திருட்டு

கலென்பிந்துனுவெவ – சீவலக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மனைவி வீடு ஒன்றிற்கு அனுமதியின்றி மின்சாரத்தை பெற்றுக் கொண்டமை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கெக்கிராவ மின்சார சபையின் சுற்றிவளைப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கலென்பிந்துனுவெவ, யகல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​அங்கீகரிக்கப்படாத மின்சார பாவனை தொடர்பில் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெண் ஒருவர் அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

47 வயதான குறித்த பெண் இன்று (22) கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles