Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபள்ளி மாணவர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் கைவசம் உள்ளது - சஜித் பிரேமதாச

பள்ளி மாணவர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் கைவசம் உள்ளது – சஜித் பிரேமதாச

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் சாதகமான பதில் இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தன்னிடம் அதற்கான தீர்வுகள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கல்வி அமைச்சரை விடவும் தாம் கல்விக்காக அதிக பணிகளை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 74 வருடங்களில் எதிர்க்கட்சிகள் செய்யாத பங்கை தன்னால் ஆற்ற முடிந்ததாகவும், தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சி முற்றிலும் மாறுபட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

மக்கள் அழுத்தங்கள் மற்றும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள வேளையில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்கள் மீது அக்கறையின்றி செயற்படுவதை உறுதிப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles