Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆசிரியர்களுக்கு இலகு உடை அணிய அனுமதி இல்லை

ஆசிரியர்களுக்கு இலகு உடை அணிய அனுமதி இல்லை

அரச ஊழியர்கள் இலகுவான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு செல்லலாம் என அண்மையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இதனை அடுத்து பாடசாலை ஆசிரியர்கள் பலர் சேலை தவிர்ந்த ஏனைய வகையான ஆடைகளுடன் பாடசாலைகளுக்கு சென்றிருந்தனர்.

ஆனால் இந்த சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று அரச நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், விதியை மீறிய ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் பதில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சாந்த பண்டார தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles