ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் உக்குவெல பிரதேச சபையின் பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் மாத்தளை – களுதாவளை – நரிகந்த பிரதேசத்தில் வைத்து மாத்தளை தலைமையக பொலிஸின் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபரிடம் 2,600 மில்லிகிராம் ஹெரோயினும், ஏனைய பெண் சந்தேகநபர்களிடம் 2,500 மில்லி கிராம் ஹெரோயினும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் திருட்டு மற்றும் பிற சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சிறுவர் துஷ்பிரயோக வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் நரிகந்த பிரதேசத்தில் மறைந்திருந்து இந்த ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.