Thursday, May 22, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபரீட்சைக்கு முன்னரே வெளியான வினாத்தாள் - பரீட்சைகள் இடைநிறுத்தம்

பரீட்சைக்கு முன்னரே வெளியான வினாத்தாள் – பரீட்சைகள் இடைநிறுத்தம்

மேல்மாகாண கல்வி திணைக்களத்தினால் நடாத்தப்படும் பாடசாலை தவணைப் பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியாகியுள்ளமையினால் பல பாடசாலைகள் பரீட்சையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.

மேல்மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான இப் பரீட்சை இன்று (18) நடைபெற இருந்ததாகவும்இ மேல்மாகாணப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் உலவுவதாகவும் தெரியவந்துள்ளது.

வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் இரண்டும் பிள்ளைகளிடம் இருக்கும் போது பரீட்சை நடாத்துவதில் எவ்வித பயனும் இல்லை எனவும் இதனால் கொழும்பில் உள்ள பல பாடசாலைகள் பரீட்சையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பரீட்சை நடாத்துவதற்கும் விடைத்தாள்களை சரிபார்ப்பதற்கும் ஆசிரியர்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிடுவது பலனளிக்காது எனவும் மேல்மாகாண கல்வி திணைக்களம் இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

#Mawrata

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles