நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என கருதப்பட்டு நீதிமன்றினால் 17 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்றைய தினம் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கல்வத்த – வெலிப்பென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது வெலிப்பென்ன, பயகால, மீகதென்ன, பெருவளை, தொடங்கொட மற்றும் மதுகம பொலிஸ் நிலையங்களில் அவர் மீது பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு அவருக்கு நீதிமன்றத்தினால் 17 தடவைகள் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.