உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் இந்த வியாக்கியானத்தை சபாநாயகர் இன்று சபையில் வெளியிட்டார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்ட மூலம் முழுமையான அரசியல் யாப்புடன் முரண்பட்டதில்லை.
என்றாலும் அந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் குழுநிலையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதன்படி குறித்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சரத்துகள் அரசியல்யாப்புடன் இசைந்து செல்லும் வகையில் திருத்தப்பட வேண்டும்.