15 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (16) காலை வயலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக எஹெட்டுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயலில் தவறி விழுந்து நீரில் மூழ்கும் போது மூச்சுத் திணறியதில் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.
எஹெட்டுவெவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற குறித்த மாணவன், எஹெட்டுவெவ – அத்தனபொல சேர்ந்தவராவார்.
தந்தைக்கு நெல் பயிர் உரையொன்றை கொடுத்து வீடு திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.