கமநல சேவை நிலையங்களில், யூரியா உரம் விநியோகத்தின் போது, அதிகாரிகள் அல்லது பணியாளர்கள் சேவையில் அலட்சியம், விவசாயிகளுக்கு தொந்தரவு மற்றும் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவாவின் 0718714219 என்ற தொலைபேசி எண்ணெ தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வாறான உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை உடனடியாக ஆராய்ந்து தேவைப்பட்டால் அவர்களை பணி இடைநிறுத்தம் செய்யுமாறு விவசாய, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவிற்கு பணிப்புரை விடுத்தார்.