பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சிட்னி உள்ளுர் நீதிமன்றில் இன்று அவரது பிணை மனு மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனமும், இலங்கை அரசாங்கமும் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும், 150,000 டொலர்கள் சரீர பிணை வழங்க தயார் என்றும் அவரது சட்டத்தரணியால் அறிவிக்கப்பட்டது.
இதனைக் கருத்திற் கொண்ட நீதிமன்றம், அவரை இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரையில் தங்குமிடத்தில் இருந்து வெளியில் செல்லவும், டிண்டர் போன்ற டேட்டிங் செயலிகளை பயன்படுத்தவும் தடை விதித்தும், நாளாந்தம் காவல்துறை நிலையத்தில் கையெழுத்திடவும் நிபந்தனை விதித்து, பிணை வழங்கியது.