தனது மூத்த சகோதரனின் மகளை பலாத்காரம் செய்து தாயாக்கிய நபர் ஒருவருக்கு கடந்த 16ஆம் திகதி கடுங்காவல் தண்டனையுடன் 10 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மேலும், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமிக்கு 400,000 ரூபா இழப்பீடும், 20,000 ரூபா அரசு கட்டணமாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
2014 மே 20 ஆம் திகதி அன்று, குறித்த சிறுமி சந்தேக நபரால் அவரது வீட்டில் பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது அவளுக்கு 14 வயது என தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் தாயார் வெளிநாட்டில் இருந்தபோது, சிறுமியின் சித்தப்பா எனக்கூறப்படும் நபர் அவரை தொடர்ந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுமி, சிறுமியின் தந்தை மற்றும் குழந்தையின் ரத்த மாதிரிகள் டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது குழந்தையின் தந்தை, சிறுமியின் சித்தப்பா என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த சிறுமி வவுனியா கிழவன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இச்சம்பவத்தின் பின்னர் அவர் கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.