Thursday, July 17, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அனைத்து இரத்தப் பரிசோதனைகளும் இடைநிறுத்தம்

காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அனைத்து இரத்தப் பரிசோதனைகளும் இடைநிறுத்தம்

இலங்கையின் முன்னணி மகளிர் வைத்தியசாலையான காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இரத்தப் பரிசோதனை நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரத்தப் பரிசோதனை செய்வதற்குத் தேவையான பொருட்கள் கிடைக்காததால் இவ்வாறு பரிசோதனை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வரலாற்றில் முதன்முறையாக மகளிர் மருத்துவமனையில் இரத்த பரிசோதனை செய்யும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான கடிதத்தை வைத்தியசாலையின் அனைத்து உள்ளக பிரிவுகளுக்கும் வைத்தியசாலை பணிப்பாளர் அனுப்பி வைத்துள்ளதாகவும் இதன் காரணமாக கடந்த 14 மற்றும் 15 ஆம் திகதி ஆகிய இரு தினங்களிலும் வைத்தியசாலையில் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வைத்தியசாலையில் தங்கியிருந்த கர்ப்பிணித் தாய்மார்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளளனர்.

எனினும் நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட உதவிகள் காரணமாக மீண்டும் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles