Wednesday, April 15, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 பாதீட்டு முன்மொழிவுக்கமைய, இன்று (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி, கடவுச்சீட்டு வழங்குவதற்கான சாதாரண சேவைக் கட்டணம் 5,000 ரூபாவாகவும், ஒரு நாள் சேவைக்குரிய கட்டணம் 20,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடவுச்சீட்டை பெறுவதற்கு, சாதாரண சேவைக்கு 3,500 ரூபாவும், ஒரு நாள் சேவைக்கு 15,000 ரூபாவும் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தினால் கட்டணமாக அறவிடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles