உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பாக வெளி தரப்பினருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முன்னைய அறிவிப்புகள் வங்கித் துறை, ஓய்வூதிய நிதி, காப்புறுதித் துறை மற்றும் ஏனைய துறைகளை பாதிக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.