அப்பிள் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் பயன்படுத்திய பாதணி ஜோடியொன்று 218இ750 அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை நாணய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபா) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஜுலியன்ஸ் ஒக்சன்ஸ் எனும் ஏல விற்பனை நிறுவனத்தினால் கடந்த 11 முதல் 13 ஆம் திகதிவரை இப்பாதணி ஜோடி ஏல விற்பனைக்கு விடப்பட்டது.
இந்நிலையில், இப்பாதணி ஜோடி 218,750 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இப்பாதணியை 1970களிலும் 1980களிலும் ஸ்டீவ் ஜொப்ஸ் அணிந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.