மத்துகமவில் இருந்து ஹினிதுகம நோக்கி பயணித்த வேன் ஒன்று விட்டு விலகி கவிழ்ந்ததில் பெண் ஒருவர் பலியானதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
பலத்த காயமடைந்தவர்கள் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகாதன்ன பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (16) அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதி உறங்கியதால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.