உரம் தொடர்பான முட்டாள்தனமான தீர்மானத்தினால் தேயிலை உற்பத்தி சுமார் 60 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அதனால் தேயிலை விவசாயிகளுக்கு நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (16) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேயிலைக்கான உர மூடையொன்றின் விலை 15,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், தேயிலை பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள உரப்பிரச்சினைக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இன்று பல பிரதேசங்களில் கொள்வனவு செய்வதற்கு கூட உரம் இல்லை என குறிப்பிட்ட அவர், உரங்களுக்கு சலுகைத் திட்டமொன்றை அமுல்படுத்துமாறு யோசனை முன்வைத்தார்.
தரமற்ற களைக்கொல்லிகளை சந்தையில் இருந்து அகற்ற அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.