இலங்கை மத்திய வங்கிக்கு நேற்று (15) விசேட திறைசேரி உண்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வெளியீட்டின் மதிப்பு 129,920.41 மில்லியன் ரூபா அல்லது 12,992 கோடி ரூபாவாகும்.
இலங்கை மத்திய வங்கி நேற்று திறைசேரியின் கடன் சேவை கொடுப்பனவுகளை ஆராயும் கோரிக்கையின் பேரில் இந்த விடயம் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி இலங்கை மத்திய வங்கியின் வசம் உள்ள திறைசேரி உண்டியல்கள்/பத்திரங்களின் முகமதிப்பு 2,570,671.54 மில்லியன் ரூபாவாகவும், நவம்பர் 14ஆம் திகதி இந்த பெறுமதி 2,440,751.13 மில்லியன் ரூபாவாகவும் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறுஇ மத்திய வங்கிக்கு திறைசேரி உண்டியல்களை வழங்கும் போது புதிய பணப்புழக்கம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதை ‘பணம் அச்சிடுதல்’ என்ற பொதுவான சொல்லை பயன்படுத்தியும் கூறலாம்.
அரசாங்கத்துடனான மத்திய வங்கியின் பரிவர்த்தனைகளில், மத்திய வங்கி அரசாங்க கருவூல உண்டியல்களை வாங்குகிறது மற்றும் அரசாங்கத்திற்கு தற்காலிக முன்பணங்களை வழங்குகிறது.