வவுனியா, பூந்தோட்டம் போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி இதனை உறுதிப்படுத்தினார்.
22 முதல் 30 வயதுக்குட்பட்ட 5 கைதிகள் நேற்று (15) பிற்பகல் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தப்பியோடிய கைதிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதலின் பின்னர் காணாமல் போன 7 கைதிகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.