தேசிய கீதத்தை உரக்கப் பாடாமை காரணமாக ஆசிரியர் ஒருவர் மாணவரை கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அவிசாவளை – ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது தேசிய கீதத்தை மாணவர்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
இதன்போது உரக்க பாடுமாறு தெரிவித்து குறித்த ஆசிரியர் மாணவர் ஒருவரின் தலையில் தாக்கியதாக பெற்றோர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக மாணவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தற்போது பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.