Tuesday, May 20, 2025
28.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனவரி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவு வழங்கப்படும்

ஜனவரி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவு வழங்கப்படும்

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த மதிய உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வழமையைப் போன்று தேவையான அளவு உணவுக் கிடைப்பதில்லை என்பதனை அமைச்சர் பாராளுமன்றில் முன்னதாக ஏற்றுக்கொண்டிருந்தார்.

இதற்கமையவே மதிய உணவுத்திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles