Wednesday, May 21, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉர நிறுவனங்களின் உர மோசடி அம்பலமானது

உர நிறுவனங்களின் உர மோசடி அம்பலமானது

விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்குவதற்காக அரச உர செயலகத்தின் அனுமதியுடன், யூரியா உரத்தை இறக்குமதி செய்த தனியார் நிறுவனங்கள், போலி ஆவணங்களை தயாரித்து அதிக விலைக்கு அவற்றை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகளுக்கு உரிய முறையில் உரம் கிடைக்காமை தொடர்பில் ஆராயுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2020 இல் விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

விவசாயிகளுக்கு உரங்களை வழங்குவதற்காக உரங்களை இறக்குமதி செய்ய 17 தனியார் நிறுவனங்கள் மற்றும் 2 அரச நிறுவனங்களுக்கு தேசிய உர செயலகம் அனுமதி வழங்கியிருந்தது.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles