Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைப் பெண்ணின் மரணம் - சாட்சிகளை வழங்க ஜப்பான் உறுதி

இலங்கைப் பெண்ணின் மரணம் – சாட்சிகளை வழங்க ஜப்பான் உறுதி

இலங்கைப் பெண் ஒருவர் குடிவரவு தடுப்பு மையம் ஒன்றில் மரணமடைந்தமை தொடர்பான வழக்கின் சாட்சிப்பொருளாக பாதுகாப்பு கமரா (CCTV) காட்சிகளை சமர்ப்பிப்பதாக ஜப்பானிய அரசாங்கம் நகோயா மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை ஜப்பானிய அரசாங்கம் நீதிமன்றில் கடந்த 14 ஆம் திகதி தெரிவித்ததாக மரணமான பெண்ணின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

விஷ்மா சந்தமாலி நகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகத்தில் 2021 மார்ச் மாதத்தில் குறித்த இலங்கைப் பெண் மரணமானார்.

இந்த மரணம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய 295 மணிநேர சீசீரீவி காட்சிகளை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே பெண்ணின் குடும்பத்தினரின் கோரிக்கையாக இருந்தது.

இதன் மூலம் ஜப்பானிய அதிகாரிகளால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாத தரவுகளை அறிந்து கொள்ள முடியும் என்று பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக 2022 நவம்பர் 14 ஆம் திகதியன்று ஜப்பானிய அரசாங்கத்துக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் சாதகமான பதிலை ஜப்பானிய அரசாங்கம் நேற்று வழங்கியுள்ளது.

இதுகுறித்து கருத்துரைத்துள்ள மரணமான இலங்கை பெண்ணுக்காக வாதாடும் சட்டத்தரணிஇ இந்த காணொளிக் காட்சியை வழங்குவதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில் முழு 295 மணிநேர காணொளிக் காட்சிகளையும் அரசாங்கம் சமர்ப்பிக்கும் என்று தாம் நம்புவதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2014ஆம் ஆண்டு ஜப்பானின் குடியேற்ற மையம் ஒன்றில் மரணமான கெமரூன் நாட்டின் பொதுமகன் தொடர்பான வழக்கில் சீசீரீவி காணொளி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்மூலம் அவர் துன்புறுத்தப்பட்டமை தெரியவந்தமையை அடுத்துஇ ஜப்பானிய அரசாங்கம் மரணமானவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையை ஜப்பானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles