Monday, March 16, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயானையை கொன்று புதைத்தவர்களை தேடி விசாரணை

யானையை கொன்று புதைத்தவர்களை தேடி விசாரணை

திம்புலாகல – கந்தேகம கிராமத்தில் காட்டு யானையை மின்சாரம் தாக்கி கொன்று தோட்டத்தில் புதைத்தவர்களைக் கண்டறிய வனஜீவராசிகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த காட்டு யானை கடந்த 12 ஆம் திகதி கொல்லப்பட்டு பின்னர் உடலத்தை இவ்வாறு புதைத்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மிளகாய் மற்றும் கௌபி பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தில் இந்த காட்டு யானை புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தோட்டத்தின் உரிமையாளர் உள்ளிட்ட குழுவினரே இக்கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதோடு, இந்த காட்டு யானையின் சடலத்தின் பிரேத பரிசோதனை இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles