மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை என Fitch Ratings தெரிவித்துள்ளது.
Fitch Ratings அறிக்கை ஒன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த ஓகஸ்ட் மாதம் மின் கட்டணத் திருத்தம் செய்யப்பட்ட போதிலும், அது இலங்கை மின்சார சபையின் தொழிற்பாட்டு செலவினங்களை ஈடுசெய்ய போதுமானதாக இருக்காது.
கட்டண அதிகரிப்பு தற்போதைய மூலப் பொருள் விலைக்கு மத்தியில் உற்பத்தி செலவுகளை ஈடு செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என நம்பவில்லை.
எவ்வாறாயினும் கட்டண அதிகரிப்பு இழப்புகளைக் குறைப்பதற்கு உதவும். மூலப் பொருளுக்காக செலவுகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை நோக்கி செல்ல முடியுமாயின் நிதி நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்த முடியும்.