Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாத்தளையில் குடும்பத்தினர் மீது தாக்குதல் : மூன்றரை வயது சிறுவன் பலி

மாத்தளையில் குடும்பத்தினர் மீது தாக்குதல் : மூன்றரை வயது சிறுவன் பலி

மாத்தளை – ரன்பிமகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் இரு மகன்கள் மீது அயல்வீட்டுக்காரர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மூன்றரை வயது சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் படுகாயமடைந்த நால்வரும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

38 வயதான தாய், 19 வயது மகள் மற்றும் 15 வயது மகன் ஆகியோர் தற்போது அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக நேற்று (14) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles