Sunday, November 17, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் தன்னிச்சையான செயற்பாடுகளின் ஊடாக மக்களின் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றமையை கண்காணிக்கக்கூடியதாக உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையானது ஜனநாயக சமூகத்தின் உயிர்ப்பு மற்றும் சட்டவாட்சிக்கு பாரிய அச்சுறுத்தல் என்பதே மனித உரிமை ஆணைக்குழுவின் நிலைப்பாடு என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles