இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் நடவடிக்கை காரணமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 15 கொள்கலன் பால்மாவை வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தொழிற்சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
நாளாந்தம் சுமார் 200,000 பாவனையாளர்கள் பால்மாவை பயன்படுத்துவதாகவும், அவர்களில் 20 வீதமானவர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவையும், எஞ்சிய 80 வீதமானோர் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவையும் பயன்படுத்துவதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
பால்மா தாங்கிய கப்பல் கடலில் இருந்த போது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் தன்னிச்சையான நடவடிக்கையால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பால்மா கொள்கலன்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.