Tuesday, March 18, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதரமற்ற ரின் மீன்களை தயாரித்த 5 நிறுவனங்கள் மீது வழக்கு தொடராத நுகர்வோர் ஆணையம்

தரமற்ற ரின் மீன்களை தயாரித்த 5 நிறுவனங்கள் மீது வழக்கு தொடராத நுகர்வோர் ஆணையம்

தரமற்ற ரின் மீன்களை உற்பத்தி செய்த 5 நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனால் தரமற்ற ரின் மீன்களை விற்பனை செய்த விற்பனையாளர்கள் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தணிக்கையில் தெரியவந்தது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் பிரிவு 61 (3) (b) இன் படி, ஒரு தயாரிப்பு பயன்படுத்த முடியாதது அல்லது நுகர்வுக்கு தகுதியற்றது என்று கண்டறியப்பட்டால், அந்த தயாரிப்பு அல்லது பொருட்களின் இருப்பை தடை செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனடிப்படையில், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஊடாக வர்த்தக அமைச்சினால் பரிசோதிக்கப்பட்டு அறிக்கைகள் அனுப்பப்பட்ட 06 ரின்மீன் மாதிரிகளில் 05 தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் நிர்வாகம் கணக்காய்வுக்கு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முறைப்படி சந்தையில் இருந்து மாதிரிகள் எடுக்கப்படாததால் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என நிர்வாகம் கணக்காய்வாளரிடம் குறிப்பிட்டுள்ளது.

#Lankasara

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles