உலக மக்கள்தொகை இன்று 8 பில்லியனைத் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
2080களில் உலக மக்கள் தொகை மேலும் 2.4 பில்லியன் மக்களைச் சேர்ப்பதால், உணவு. தண்ணீர் மற்றும் பிற விடயங்களுக்கு பற்றாக்குறை இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தனி நபருக்கும் எரிபொருள், மரம், தண்ணீர் மற்றும் உறைவிடம் தேவை என உயிரியல் பன்முகத்தன்மை மையத்தின் மக்கள்தொகை மற்றும் நிலைத்தன்மை பணிப்பாளர் ஸ்டீபனி ஃபெல்ட்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.
வள அழுத்தம் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் அச்சுறுத்தலாக இருக்கும், அங்கு மக்கள் தொகை பெருகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். காலநிலை தாக்கங்களுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இவையும் அடங்கும், மேலும் பெரும்பாலான காலநிலை நிதி தேவைப்படும் நாடுகளாகும்.
738 மில்லியன் மக்கள் ஏற்கனவே போதுமான உணவுப் பொருட்கள் இல்லாமல் வாழும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில், மக்கள்தொகை நூற்றாண்டின் நடுப்பகுதியில் 95% அதிகரிக்கும் என பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. நூற்றாண்டின் நடுப்பகுதியில் துணை-சஹாரா ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி நீடிக்க முடியாததாக இருக்கும் என ஒக்டோபர் அறிக்கை ஒன்றில் திங்க் டேங்க் எச்சரித்துள்ளது.