Monday, March 16, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வருகிறார் பசில்

இலங்கை வருகிறார் பசில்

பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 20ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இந்த தருணத்தில், வீழ்ச்சியடைந்த கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பசில் ராஜபக்ஷ இலங்கை வர தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானங்களுக்கு புறம்பாக தீர்மானங்களை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், பொது மாநாட்டைக் கூட்டி கட்சியின் முழுப்பொறுப்பையும் வகுத்து கட்சியை பலப்படுத்துவதே பசில் ராஜபக்ஷவின் திட்டமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷ வெளிநாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில் ஜனாதிபதியுடன் செய்திகளை பரிமாறிக்கொண்டதாகவும், அமைச்சரவை மாற்றம் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பல தடவைகள் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles